×

பெரம்பலூர் மாவட்டத்தில் 3 இன்ஸ்பெக்டர்கள் பணி மாறுதல்

பெரம்பலூர்,மே.29: பெரம்பலூர் மாவட்டத்தில் 3 இன்ஸ்பெக்டர்கள் பணி மாறுதல் : திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் உத்தரவு. இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கதிரவன் என்பவர் ஏற்கனவே கடந்த 13ம்தேதி புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக அந்தப் பணிமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, இன்ஸ்பெக்டர் கதிரவன் திருச்சி மாவட்டம், துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த வெங்கடேஷ்வரன், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராகவும், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி
அலுவலகத்தில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சிக்கந்தர் பாஷா, அரியலூர் மாவட்டம் கூவாகம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராகவும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் செல்வக் குமாரி என்பவர் பெரம்பலூர் மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ் பெக்டராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார் என திருச்சி சரக டிஐஜி வருண் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் 3 இன்ஸ்பெக்டர்கள் பணி மாறுதல் appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Perambalur ,Trichy DIG Varunkumar ,Kathiravan ,Kunnam Police Station ,Perambalur district… ,Dinakaran ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...