×

பெட்ரோல், டீசல் விலையை 16 முறை ஏற்றி, 2 முறை குறைத்த மோடி: முத்தரசன் காட்டம்

திருச்சி: பாஜக பொறுப்பேற்ற 8 ஆண்டுகளில் மதச்சார்பற்ற கொள்கை சீர்குலைந்த நிலையில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை 16 முறை ஏற்றி 2 முறை மட்டுமே மோடி அரசு குறைத்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். திருச்சியில் அவர் அளித்த பேட்டி: ஒன்றிய பாஜ அரசால் சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய அவலநிலை உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாமல், அதேநேரம் வேலையில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வேலைவாய்ப்பு குறித்து இதுவரை பிரதமர் மோடி பேசவில்லை.இதுவரை 16 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2 முறை மட்டுமே மோடி அரசால் விலை குறைக்கப்பட்டுள்ளது. பாஜக பொறுப்பேற்ற 8 ஆண்டுகளில் மதச்சார்பற்ற கொள்கை சீர்குலைந்த நிலையில் உள்ளது. தமிழகத்தில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக ஆலைகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கொந்தளிப்பு போல இந்தியாவிலும் ஏற்படும் நிலை உள்ளது. 800 வகையான மருந்துகள் 10 சதவீத விலை உயர்ந்துள்ளது. பிரதமரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து அண்ணாமலை கூறும் கருத்துகளை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்….

The post பெட்ரோல், டீசல் விலையை 16 முறை ஏற்றி, 2 முறை குறைத்த மோடி: முத்தரசன் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Mutharasan Kattam ,BJP ,
× RELATED இந்தியா தற்போது ஊழலுக்கு...