×

பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

 

திருவள்ளூர், மே 5: பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் காட்டுப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில், ஒன்றிய துணைச் செயலாளர் கே.எஸ்.புகழேந்தி அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் ஜனார்தனன், பாஸ்கர், சுமதி குமார், வயலை பிரபாகரன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு ஒன்றியச் செயலாளர் ப.ச.கமலேஷ் தலைமை தாங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணி, முலாம்பழம், கிர்ணி பழம், வெள்ளரிக்காய், குளிர்பானம் ஆகியவற்றை வழங்கினார்.

இதில் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் கேஜிஆர்எஸ்.ஸ்டாலின், குட்டியா, அருண்குமார், கன்னியப்பன், ஞானமூர்த்தி, நடேசன், முரளி, பச்சையப்பன், கிருஷ்ணன், தியாகு, மணிகண்டன், பிரபாகரன், கோபு, சிவா, ஸ்ரீதர், பாலா, சிவகுமார், நித்திஷ், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : pavilion ,Poonamalli East Union DMK ,Tiruvallur ,Kattupakkam ,Union Deputy Secretary ,K.S. Pugazhendi ,Janardhanan ,Bhaskar ,Sumathi Kumar ,Vialai Prabhakaran ,Water pavilion ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு