×

புனித அந்தோணியார் ஆலய தேர்திருவிழாவில் மோதல்

முஷ்ணம், ஜூன் 23: கடலூர் மாவட்டம் முஷ்ணம் அடுத்த சோழத்தரம் அருகே அறந்தாங்கியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தேர்திருவிழா நடத்துவது வழக்கம். இந்த திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை உள்ளது. கடந்த ஜூன் 13ம்தேதி இந்த ஆண்டு தேர்திருவிழா நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் கொடியேற்றம் மற்றும் தேர் பவனியில் முதல் மரியாதை தங்களுக்குத்தான் வழங்க வேண்டுமென சின்னப்பன் மற்றும் பவுல்ராஜ் ஆகிய இரு தரப்பினர் உரிமை கொண்டாடுவதால் திருவிழா நடத்தப்படவில்லை. வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் இரு தரப்பினரிடையேயும் பேச்சு நடத்தி நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் கடந்த 18ம்தேதி பவுல்ராஜ் தனது ஆதரவாளர்களுடன் திருவிழா தொடர்பாக ஒரு கூட்டம் நடத்தி வருகிற 1ம்தேதி பாதிரியார் தலைமையில் தேர்திருவிழா நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக கோயில் அருகே தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் ஆலோசனை நடத்தினார்.

ஆனால் சின்னப்பன் தரப்பினர் திருவிழாவை இப்போதே நடத்த வேண்டும் என்று கூறி வந்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் அபாய சூழல் உண்டானதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரையு்ம அழைத்து தாசில்தார் தமிழ்ச்செல்வன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்திருந்தார். இருதரப்பினருடன் தாசில்தார் சமாதானம் பேச்சு நடத்தினார். ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை. கோர்ட்டு அல்லது பிஷப் மூலம் நடவடிக்கை எடுத்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சின்னப்பன் தரப்பினர் நேற்று சம்பந்தப்பட்ட புனித அந்தோணியார் கோயிலில் கொடியேற்றப்போவதாக தகவல் பரவியது. முஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் அறந்தாங்கி கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயத்தின் முன்பு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ஆலயத்தின் அருகே பொதுமக்களும் திரண்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post புனித அந்தோணியார் ஆலய தேர்திருவிழாவில் மோதல் appeared first on Dinakaran.

Tags : St. Anthony's Church ,Cuddalore district ,Cholatharam ,St. Anthony's ,Aranthangi ,St. ,Anthony ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு...