×

புதுமைப்பெண் திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற்ற டிரினிடி கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா

நாமக்கல், மே 28: தமிழ்நாடு அரசின் சார்பில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2024-25ம் கல்வி ஆண்டில், இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவிகள் 292 பேருக்கு, ரூ.29.61 லட்சம் கல்வி உதவித்தொகையாக பெறப்பட்டு உள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனடைந்த டிரினிடி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா, கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் சேர்மன் நல்லுசாமி தலைமை வகித்தார். செயலாளர் பிஎஸ்கே செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், கல்லூரி முதல்வர் லட்சுமி நாராயணன், வெள்ளி விழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அரசு பரமேசுவரன், துணை முதல்வர் நவமணி, நிர்வாக அலுவலர் செந்தில்குமார், நோடல் அலுவலர் அனிதா, புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கோபியா, மதுக்கரை வேணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post புதுமைப்பெண் திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற்ற டிரினிடி கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Trinity College ,Namakkal ,Tamil Nadu government ,Trinity College for Women, Arts and Science ,
× RELATED விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி