×
Saravana Stores

புஞ்சை புளியம்பட்டியில் ஊர்வலம் விநாயகர் சிலைகள் பவானி ஆற்றில் கரைப்பு

 

சத்தியமங்கலம், செப்.23: புஞ்சை புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பு.புளியம்பட்டி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இந்து முன்னணி சார்பில் 50 சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டன. தினமும் பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர். சதுர்த்தியின் முக்கிய நிகழ்வான, சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது. இதற்கென டாணாபுதுாருக்கு அனைத்து சிலைகளும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.

நேற்று மாலை முத்துமாரியம்மன் கோயில் முன்பு மேள தாளத்துடன் துவங்கிய ஊர்வலம் சத்தியமங்கலம் சாலை, பஸ் நிலையம், மாதம்பாளையம் சாலை, பவானிசாகர் சாலை, ஆதிபராசக்தி அம்மன் கோவில் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், பவானிசாகர் அடுத்துள்ள பகுடுதுறை பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. சத்தியமங்கலம் ஏஎஸ்பி அய்மன் ஜமால் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். முன்னதாக நேற்று இரவு பவானிசாகர் சாலையில் எஸ்ஆர்டி நகர் முன்பு இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது.

The post புஞ்சை புளியம்பட்டியில் ஊர்வலம் விநாயகர் சிலைகள் பவானி ஆற்றில் கரைப்பு appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Puliyampatti ,Bhavani river ,Sathyamangalam ,Punjai Puliyampatti ,
× RELATED கொடிவேரி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு; பயணிகளுக்கு தடை