×

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசு பள்ளி 99% தேர்ச்சி

 

ஆர்.எஸ்.மங்கலம், மே 10: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 69 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர். இதில் 68 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி இந்துஜா 540 மதிப்பெண்கள் முதலாவதாகவும், விஜயராகவன் 533 இரண்டாவது இடம் பிடித்தார். ஆர்.எஸ்.மங்கலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 107 மாணவிகள் தேர்வு எழுதியதில் 103 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் 534 மதிப்பெண்கள் பெற்ற அபிராமி, சாலினி முதலாமிடத்தையும், மதுமிதா 524, சேது ஸ்ரீ 521 மதிப்பெண்கள் பெற்றனர்.

அதேபோல் ஆர்.எஸ் மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 39 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 36 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் ரால்பின் பயஸ் 496 மதிப்பெண்கள், ராஜா சண்முகம் 404, ஈஸ்வரன் 402 மதிப்பெண்கள் பெற்றனர். திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 89 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 70 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். யோகஸ்ரீ 546 மதிப்பெண்கள், காவிய பலா 519, நிஸ்மா 497 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடமும் பெற்றனர்.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசு பள்ளி 99% தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Govt School ,RS Mangalam ,Sanaveli Government Higher Secondary School ,Government School ,Dinakaran ,
× RELATED சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்