×

பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்கிறது ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 

மேட்டுப்பாளையம், ேம 26: கோவை மாவட்டம் பில்லூர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 9 மணி நிலவரப்படி 94.5 அடி. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து தற்போது பவானி ஆற்றின் வழியாக வினாடிக்கு 6000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேநிலை தொடர்ந்தால் நேற்றிரவு 11 மணிக்கு அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்ட உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி இரவு 12 மணிக்கு நான்கு மதகுகளின் வழியாக நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனால் பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது.

ஆற்றின் கரையோரத்தில் உள்ள தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, வச்சினம்பாளையம், பாலப்பட்டி, சிறுமுகை, ஆலாங்கொம்பு, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்கிறது ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Billur dam ,Mettupalayam ,Coimbatore district ,Billur ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...