×

பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்த பின்னர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டை தீயிட்டு கொளுத்திய போராட்டக்காரர்கள்

கொழும்பு: இலங்கையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் பிரதமர் வீட்டிற்குள்ளும் புகுந்து தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம் நிலவியது. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகுவதாக அறிவித்த பின்பும் போராட்டக்காரர்களின் கோபம் தணியவில்லை. நேற்று மாலை முதலே போராட்டகாரர்கள் சாரை சாரையாக பிரதமரின் தனிப்பட்ட வீட்டை நோக்கி படையெடுத்தனர். பிரதமரின் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீஸ் வாகனத்தை சத்தம் எழுப்பியவாறே பின்னோக்கி பயணிக்க வைத்தனர். தடுப்பை மீறி மக்கள் பிரதமர் வீட்டிற்குள் புக முயன்றதால் போலீசார் இரண்டுமுறை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இருப்பினும் ரணில் விக்ரமசிங்கேவின் வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பொருட்களை அடித்து நொறுக்கினர். ஒருகட்டத்தில் பிரதமர் வீட்டையும் அவர்கள் தீவைத்து கொழுத்தினர். மளமளவென பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வணக்கங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இருப்பினு இரவு நீண்டநேரம் போராட்டக்காரர்கள் பிரதமர் வீட்டிற்கு வெளியே திரண்டு நின்று முழக்கங்களை எழுப்பினர். …

The post பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்த பின்னர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டை தீயிட்டு கொளுத்திய போராட்டக்காரர்கள் appeared first on Dinakaran.

Tags : Ranil Wickremesinghe ,Colombo ,Sri Lanka ,President ,House ,Dinakaran ,
× RELATED இன்று ஓட்டுப்பதிவு இலங்கை புதிய அதிபர் யார்? 39 வேட்பாளர்கள் போட்டி