* கடைசி இடத்துக்கு சென்றது சென்னை* ஐடியா இல்லாததால் நகர்புறம் நிலைமை படுமோசம்* கமிஷனால் கதறும் மாநகரம்சென்னை: மத்திய அரசு வெளியிட்டுள்ள நகரங்களின் சிறப்பான செயல்பாடுகள் தொடர்பான அகில இந்திய ரேங்க்கை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அரசிடம் நகர்புற திட்டமிடல் குறித்த கொள்கை இல்லாத காரணத்தால் தமிழகம் முழுவதும் உள்ள நகரங்கள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்தியாவில் 100க்கு மேற்பட்ட பெருநகரங்கள் உள்ளன. இந்த நகரங்களில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ரூத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் நகரங்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்டது. இதன்படி ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு அதிகம் மக்கள் தொகை உள்ள நகரங்கள் மற்றும் ஒரு மில்லியனுக்கு குறைவாக மக்கள் தொகை உள்ள நகரங்கள் என்று இரண்டு வகையாக பிரித்து தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஒரு மில்லியனுக்கு அதிகம் மக்கள் கொண்ட நகரங்களின் பட்டியல் 66.08 மதிப்பெண்கள் பெற்று இந்தூர் முதல் இடமும், 60.82 மதிப்பெண்கள் பெற்று சூரத் 2வது இடமும், 59.04 மதிப்பெண்கள் பெற்று போபால் 3வது இடமும் பிடித்துள்ளது. 51 நகரங்கள் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இதன்படி 50.51 மதிப்பெண்கள் பெற்று கோவை 12வது இடமும், 48.74 மதிப்பெண்கள் பெற்று சென்னை 18 வது இடமும், 48.10 மதிப்பெண்களுடன் மதுரை 22 இடத்தை பிடித்துள்ளது. ஒரு மில்லியனுக்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல் 60 நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் 52.29 மதிப்பெண்களுடன் டெல்லி முதல் இடமும், 51.69 மதிப்பெண்களுடன் திருப்பதி 2வது இடமும், 51.59 மதிப்பெண்களுடன் காந்தி நகர் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் சேலம் 49.04 மதிப்பெண்களுடன் 5வது இடத்தையும், திருப்பூர் 48.92 மதிப்பெண்களுடன் 6 வது இடத்தையும், 47.2 மதிப்பெண்களுடன் நெல்லை 10 வது இடத்தையும், 46.56 மதிப்பெண்களுடன் ஈரோடு 13வது இடத்தையும், 46.18 மதிப்பெண்களுடன் வேலூர், 14 வது இடத்தையும், 45.54 மதிப்பெண்களுடன் திருச்சி 17வது இடத்தையும், 44.59 மதிப்பெண்களுடன் தூத்துக்குடி 20 வது இடத்தையும், 42.60 மதிப்பெண்களுடன் தஞ்சாவூர் 26வது இடத்தையும், 40.85 மதிப்பெண்களுடன் திண்டுக்கல் 30 வது இடத்தையும் பிடித்துள்ளது.திட்டமிடலில் மிகவும் மோசம்நகர்புற திட்டமிடல் பிரிவில் தமிழக பெரு நகரங்கள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்த பிரிவில் சென்னை 44 வது இடத்தையும், கோவை 29 இடத்தையும், மதுரை 39 வது இடத்தையும் பிடித்துள்ளது. சிறிய நகரங்களில் நெல்லை 5வது இடத்திலும், சேலம் 6 வது இடத்திலும், ஈரோடு 14 வது இடத்திலும், திருப்பூர் 20வது இடத்திலும், தஞ்சை 33வது இடத்திலும், திருச்சி 34 வது இடத்திலும், வேலூர், 38 வது இடத்திலும், தூத்துக்குடி 50 வது இடத்திலும், திண்டுக்கல் 51 வது இடத்திலும் உள்ளது. கோவை பெஸ்ட்மற்றவை ‘ஒஸ்ட்’ தென் மாநிலங்களில் ஒரு மில்லியனுக்கு அதிகமாக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல் தென் மாநிலங்களில் இருந்து 8 பெரு நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் கோவை மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளது. ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள நகரங்களில் தென் மாநிலங்களில் இருந்து 19 நகரங்கள் இடம் பெற்றுள்ளது.இதில் திருப்பூர், நெல்லை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 4 நகரங்கள் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளன.சிறுநகரங்கள் நிலை மோசம்இந்தியாவில் உள்ள 111 நகரங்களில் செயல் திறன் ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 3 பெரு நகரங்கள், 10 சிறு நகரங்கள் இதில் கலந்து கொண்டன. பெரு நகரங்களில் கோவை மட்டும் ஓரளவு நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளது. சிறு நகரங்களில் அனைத்தும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளது. பின்நோக்கி செல்லும் ஐடிபயன்படுத்தபடாத தொழில்நுட்ப நகரங்களில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் தமிழகத்தின் அனைத்து நகரங்களும் பின்தங்கி உள்ளன. தொழில் பிரிவில் மதுரை 32.11, சென்னை 29.97, கோவை 28.03 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.சென்னையில் ஆபத்தான குடிநீர்மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை நீர் மேலாண்மை, நீர் பயன்பாடு, நீர் நிலைகள் சேமிக்கப்படும் நீரின் அளவு ஆகியவற்றை கொண்டு தண்ணீர் பஞ்சத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் 20 இந்திய நகரங்கள் உள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த சென்னையும் இடம் பெற்றுள்ளது. டாப் ‘1’ இடத்தை பிடிப்பது எப்படி?ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்ட விதிமுறைகளின் படி நாடு முழுவதும் உள்ள நகரங்களின் செயல்பாடுகள் 5 தலைப்பின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது. சேவை, நிதி, திட்டம், தொழில்நுட்பம், அரசு நிர்வாகித்தின் செயல்பாடு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மதிப்பெண் அளிக்கப்பட்டது. இதில் சேவை பிரிவுக்கு 30 மதிப்பெண்களும், நிதி மற்றும் அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு தலா 20 மதிப்பெண்களும், திட்டம் மற்றும் தொழில் நுட்பத்திற்கு தலா 15 மதிப்பெண்கள் என்று மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு இந்த தரவரிசைப்பட்டியல் தயார் செய்யப்பட்டது….
The post பின்நோக்கி நடைபோடும் தமிழகத்துக்கு இந்திய அளவில் கிடைத்த ரேங்க் 18வது இடம் appeared first on Dinakaran.