×

பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு சேர்க்கை நாளை முடிகிறது

சென்னை: கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்படவில்லை. இதனால் 9ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. கடந்த மாதம் 28ம் தேதி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நிறைவடைந்தது. சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதை தொடர்ந்து அடுத்த நாள் முதல், அதாவது 20ம் தேதி முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது நாளையுடன் நிறைவடைகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் நாளைக்குள் (5ம் தேதி) தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது….

The post பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு சேர்க்கை நாளை முடிகிறது appeared first on Dinakaran.

Tags : Polytechnic second ,Chennai ,Corona ,Dinakaran ,
× RELATED கோவிஷீல்டு ஆபத்தானதா… உண்மை என்ன?