×

பாலிசி திட்டத்தில் திருத்தம்: எல்ஐசி அறிவிப்பு

சென்னை: எல்ஐசியின் ஜீவன் அக்ஷய் VII (திட்டம் எண் 857) மற்றும் நியூ ஜீவன் சாந்தி (திட்டம் எண் 858) ஆகியவற்றில், எல்ஐசி ஆப் இந்தியா சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. எல்ஐசி ஆப் இந்தியாவின் பென்ஷன் திட்டங்களான எல்ஐசியின் ஜீவன் அக்ஷய் (திட்டம் எண் 857) மற்றும் எல்ஐசியின் நியூ ஜீவன் சாந்தி (திட்டம் எண் 858) ஆகியவற்றில் பிப்ரவரி 1, 2022 ஆன்யுடி விகிதங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் மாற்றியமைக்கப்பட்ட ஆன்யுடி விகிதங்கள் பிப்ரவரி 1, 2022 முதல் பெறப்படும் பாலிசிகளுக்கு கிடைக்கும். நியூ ஜீவன் சாந்தி திட்டத்தில் உள்ள இரண்டு ஆன்யுடி தேர்வுகளிலும் கிடைக்கும் ஆன்யுடி தொகையை எல்ஐசி வலைதளத்தில் உள்ள கால்குலேட்டர் மற்றும் எல்ஐசி செயலிகளின் மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆன்யுடி விகிதத்தில் திருத்தம் செய்யப்பட்ட எல்ஐசியின் ஜீவன் அக்ஷய் (திட்டம் எண் 857) பாலிசியை நடப்பில் உள்ள விற்பனை வழிமுறைகளோடு எல்ஐசியின் புதிய விற்பனை வழியான பொது மக்கள் சேவை மையங்கள் (CPSC – SPV) மூலமும் பெறலாம். இத்திட்டம் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு www.licindia.in என்ற வலைதளம் அல்லது ஏதேனும் எல்ஐசி கிளையை தொடர்பு கொள்ளலாம், என எல்ஐசி ஆப் இந்தியா தெரிவித்துள்ளது….

The post பாலிசி திட்டத்தில் திருத்தம்: எல்ஐசி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Jeevan ,New Jeevan Shanthi ,Dinakaran ,
× RELATED சென்னை, மதுரை, கோவையில் பணிபுரியும்...