×

பாலக்கீரை சாதம்

எப்படிச் செய்வது : முதலில் அரிசியை நன்கு சுத்தம் செய்து ஒரு கப் நீரில் ஊற வைக்கவும். பின்பு பாலக்கீரையை 10 நிமிடம் வேக வைக்கவும். ஆறியதும் சிறிதளவு நீர் சேர்த்து, பாலக்கீரையை நைசாக அரைக்கவும். பின் பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு தண்ணீருடன் ஊற வைத்த அரிசியை போட்டு, பாலக்கீரை விழுது, எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும். உடலுக்கு சத்தான பாலக்கீரை சாதம் ரெடி.

The post பாலக்கீரை சாதம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...