×

10 லட்சம் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி

புதுடெல்லி: மத்திய அரசு தேசிய இளைஞர் அதிகாரமளித்தல் (என்ஓய்இஎஸ்) திட்டப்படி இளைஞர்களுக்கு ஒழுக்கம், தேசப்பற்று, உத்வேகம் ஆகியவற்றை அதிகப்படுத்தும் வகையில் ராணுவ பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேரும் இளைஞர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. பயிற்சி நடக்கும் 12 மாதங்களில், ஊக்கத்தொகையும் அளிக்கப்படும். அதன்பின், இளைஞர்கள் படிப்பைத் தொடரலாம். அல்லது தகுதி இருந்தால் ராணுவம், துணை ராணுவப்படை, போலீஸ் துறை ஆகியவற்றில் சேரலாம்.

இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில், மத்திய இளைஞர் விவகாரம், மனித வளத்துறை, பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய அரசின் புதிய திட்டத்தை ெசயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த திட்டத்திற்கு பதிலாக, என்சிசி அமைப்பான தேசிய மாணவர் படையை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளலாம் என்றும் கருத்துகள் கூறப்பட்டன. ஆனால், இந்த திட்டத்தில் ஒழுக்கம், தேசப்பற்று, சுயமரியாதை ஆகியவற்றை கிராமப்புற பெண்கள், இளைஞர்களுக்கு கற்றுக்கொடுப்பது பிரதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்குப் பேரிடர் மேலாண்மை பயிற்சி, தகவல் தொழில்நுட்ப பயிற்சி, ஆயுர்வேதா, யோகா, பழங்கால இந்தியாவின் தத்துவம் ஆகியவை கற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உத்தராகண்ட் நிலச்சரிவு: 10 தமிழர்கள் சென்னை வருகை