×

பான் மசாலா விற்ற 2 கடைகளுக்கு சீல்

 

தர்மபுரி, நவ.8: பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் பொம்மிடி பகுதியில் உள்ள கடைகளில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையிலான குழுவினர், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மஞ்சவாடி, நத்தமேடு, துறிஞ்சிப்பட்டி, தொப்பக்கரை, திப்பிரெட்டிஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில், போலீஸ் பாதுகாப்புடன் பள்ளிக்கு அருகில் செயல்படும் 25க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் பொம்மிடியில் உள்ள ஒரு மளிகை கடையிலும், மஞ்சவாடியில் உள்ள ஒரு பெட்டிக்கடையிலும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இரு கடை உரிமையாளர்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விதிமீறும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தெரிவித்தார்.

The post பான் மசாலா விற்ற 2 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,District Food Safety Officer ,Kumanan ,Pappyrettipatti ,Bommidi ,Manjavadi ,Nathamedu ,Durinchipatti ,Thoppakkarai ,Tipprettyalli ,
× RELATED பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்