×

பாடை கட்டி மாலையோடு காத்திருக்கோம்… மாஜி அமைச்சர் உதயகுமாரிடம் தொண்டர் பேச்சு வைரல்

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு, கட்சித் தொண்டர் ஒருவர் ‘பாடை கட்டி மாலையுடன் காத்திருக்கிறோம்’ என்று போனில் பேசிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு, ஒருவர் செல்போனில் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. இந்த ஆடியோ பேச்சு வருமாறு:‘ஹலோ’.‘அண்ணன் வணக்கங்கண்ணே’.‘வணக்கம்.. சொல்லுங்க’.‘அண்ணே பேட்டி அருமையா இருந்தது..’.‘எங்கே இருந்து பேசுறீங்க?’.‘சங்கரன்கோவில்ல இருந்து பேசுறேண்ணே… பேட்டி அருமையா இருந்தது. அன்னைக்கு ஒரு பேட்டி கொடுத்தீங்கள்லண்ணே… ‘ஓபிஎஸ் கட்சியில் இணைந்தால் நான் தற்கொலையே பண்ணிக்குவேன்’னு சொன்னீங்களே… எல்லா பேட்டியும் அருமையா இருந்தது. இப்போ ஒரு பேட்டி கொடுத்திருக்கீங்களே…  ஓபிஎஸ் நிலைப்பாட்டை அப்போதைக்கப்போது மாத்திக்கிட்டு இருக்காருன்னு.. பேட்டி கொடுத்ததையும் பார்த்தோம்ணே… நல்லா இருக்குண்ணே.. அப்புறம்னே என்னைக்கு இங்கே வருவீங்க?’. ‘நாளைக்கு நைட் வந்துடுவோம்..’.‘எந்த ரூட்டுண்ணே..’.‘தென்காசியில் இருந்து போகலாமுன்னு சொல்லியிருக்காங்க… பத்தரை மணிக்கு டைம் தந்திருக்காங்க..’.‘அப்போ 11 மணிக்கு ரெடியா இருக்கோம்.. பாடை கீடை கட்டி மாலையோடு, வந்திருங்க..’‘எதுக்கு…?’‘உங்களை தூக்கிட்டு போறதுக்கு?. சாகணும்னு முடிவெடுத்திருக்கீங்கள்ல… நீங்கதானே தற்கொலை பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கீங்க.. ஓபிஎஸ் தலைமை ஏத்துட்டாருன்னு, நாங்க ரெடியா இருக்கோம்..’.  இவ்வாறு பேச்சு முடிகிறது. அதிமுக தொண்டர், முன்னாள் அமைச்சருடன் பேசிய இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது….

The post பாடை கட்டி மாலையோடு காத்திருக்கோம்… மாஜி அமைச்சர் உதயகுமாரிடம் தொண்டர் பேச்சு வைரல் appeared first on Dinakaran.

Tags : minister ,Udayakumar ,Madurai ,AIADMK ,
× RELATED சென்னை, மதுரை, கோவையில் பணிபுரியும்...