×

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.18 லட்சத்துக்கு விற்பனை

காங்கயம் : காங்கயம் தாலூக்கா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. நேற்றை சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக 85 கால்நடைகள் வந்திருந்தன. இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.55ஆயிரம் வரை விற்றது.பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது,  காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சந்தையில் 45 கால்நடைகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்….

The post பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.18 லட்சத்துக்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Varaykotta Matthawi ,Nathakadayur ,Kangayam ,Thaluka ,Govai ,Varagotta Mattuvar ,
× RELATED காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு...