×

பழநி கோயில் 2வது ரோப்கார் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

 

பழநி, நவ. 8: பழநி கோயில் 2வது ரோப்கார் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென செம்மொழி தமிழ்ச் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. பழநியில் செம்மொழி தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் டாக்டர்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கோதண்டபாணி, நிர்வாகிகள் குமரவேல், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மேலாளர் சிவநேசன் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் சுற்றுலா நகரான பழநிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

கிடப்பில் கிடக்கும் பழநி கோயிலின் 2வது ரோப்கார் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். திருட்டு சம்பவங்களை தவிர்க்க போலீசார் இரவு ரோந்துப்பணியை அதிகப்படுத்த வேண்டும். பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு வசதியாக தனிச்சாலை அமைக்க வேண்டும். கிடப்பில் கிடக்கும் பழநி-ராமேஷ்வரம், பழநி-திருப்பதி தினசரி ரயில் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post பழநி கோயில் 2வது ரோப்கார் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Robocar Project ,Palani Temple ,Palani ,SEMMOZHI TAMIL SAMANGA ,Semmozhi Tamil Society ,Palanii ,Dr. ,Ramakrishnan ,Vice President ,2nd Robocar Project ,Temple ,
× RELATED அன்னதானம் வழங்கும்...