மதுரை: மதுரை ஆதீனமாக அருணகிரிநாதர் உள்ளார். இவருக்கு பின் அடுத்த 293வது ஆதீனமாக கடந்த 2012ல் அருணகிரிநாதரால், நித்தியானந்தா நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் மதுரை சப்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. இதனிடையே நித்தியானந்தாவை அருணகிரிநாதர் நீக்கினார். இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி நித்தியானந்தா தரப்பில் சப் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், நித்தியானந்தா மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, நித்தியானந்தா ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். அதில், தன்னை ஒரு தரப்பாக சேர்க்க மறுத்த சப்கோர்ட் உத்தரவை ரத்து செய்து, தன்னையும் வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை ேநற்று விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், மதுரை முதன்மை சப் கோர்ட்டிலுள்ள வழக்கில் நித்தியானந்தாவையும் ஒரு தரப்பாக சேர்க்க அனுமதித்து உத்தரவிட்டார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
