×

பல்லடம் ஒன்றியத்தில் திட்டப்பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

 

பல்லடம், ஜூலை 4: பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சி ராசாகவுண்டம்பாளையம் பிரிவு முதல் பள்ளிபாளையம் வரை ரூ.32 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் விநியோகம் தொடங்கி வைத்தல்,நடுவேலம்பாளையம் பகுதியில் ரூ.15 லட்சத்தில் தரை மட்ட குடிநீர் தொட்டி, காளிவேலம்பட்டி முதல் வேலம்பாளையம் சாலை வரை ரூ.5 கோடி மதிப்பில் தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மத்திய மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். விழாவிற்கு பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அக்ரோ சீனிவாசன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் பூமலூர் செந்தில் வரவேற்றார். நிகழ்ச்சியில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மாவட்ட திமுக துணை செயலாளர்கள் குமார், நந்தினி, சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி, பொங்கலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், அவைத்தலைவர் பரமசிவம், மாவட்ட பிரதிநிதி நடராஜ், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் பிரியங்கா, மந்தராச்சலமூர்த்தி, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பல்லடம் ஒன்றியத்தில் திட்டப்பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : MLA ,Palladium Union ,Balladam ,Palladam Union ,Oratchi Uratchi Rasa Koundampalayam ,Maduvelampalayam ,Kalivelampatty ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...