×

பல்லடத்தில் காங்கிரஸ் நிர்வாகி கார் கவிழ்ந்து விபத்து

 

பல்லடம், ஜூன் 16: பல்லடம்-தாராபுரம் சாலையில் பல்லடம் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தியின் கார் நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பல்லடம் நகராட்சி 6வது வார்டு கவுன்சிலரும், நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்திக்கு சொந்தமான காரை அவரது இளைய மகள் ரோஜா வீட்டில் இருந்து இயக்கி காரை கொண்டு பல்லடம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது பல்லடம்-தாராபுரம் சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த மழைநீர் வடிகால் கால்வாய் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் இருந்தோர் காரினுள் இருந்த ரோஜாவை மீட்டனர். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது பற்றி பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post பல்லடத்தில் காங்கிரஸ் நிர்வாகி கார் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Pallada ,Palladam ,Congress ,Ishwaramoorthy ,Palladam-Tharapuram road ,Balladam Municipality ,6th Ward ,Councillor ,City Congress ,President ,Roja ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...