×

பறக்கும்படை சோதனையில் 12 கிலோ தங்கம் பறிமுதல் போலி நகை, ஆவணம் கொடுத்த 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை: வருமானவரித்துறை அதிரடி

சென்னை: அண்ணா நகர் காவல் நிலையம் அருகே அண்ணா நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனையிட்டனர். சென்னை சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல நகை கடையின் உரிமையாளர் சந்திர பிரகாஷ் மற்றும் ஊழியர் சரவணன் ஆகியோரிடம் 12 கிலோ தங்க நகை இருப்பது தெரிய வந்தது. உடனே அண்ணா நகர் தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த பறக்கும் படையின் மணிமொழி, ஆட்டோவில் உள்ள தங்க நகையை சுமார் 2 மணி நேரம் பரிசோதனை செய்தனர்.  அதன்பிறகு உரிய ஆவணங்கள் சரியாக இருந்ததால் தேர்தல் பறக்கும் படையினர் 12 கிலோ தங்கம் கொண்டு வந்த இருவரையும் விடுவித்தனர். மீண்டும், இவர்கள் மீது சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படையினர் 12 கிலோ தங்க நகை மற்றும் ஆவணங்களை மறுபடியும் விசாரணைக்கு எடுத்து வர உத்தரவிட்டனர். அவர்கள் அதிகாரிகளிடம் கொண்டு வந்து கொடுத்தனர்.அவற்றை சோதனை செய்தபோது 12 கிலோ தங்கம் கவரிங் என்றும் ஆவணங்கள் அனைத்தும் போலியானவை  என தெரிய வந்தது. கவரிங் நகை மற்றும் போலி ஆவணம் கொடுத்த நகைக்கடை உரிமையாளர் சந்திர பிரகாஷ் உட்பட 3 பேரிடம் தேர்தல் பறக்கும் படையினர் 3வது நாளாக விடிய விடிய விசாரணை செய்தனர். மேலும் கடை உரிமையாளர் சந்திர பிரகாஷ் கடையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.போலீசார் தங்களது நகையை பறிமுதல் செய்து விடுவார்கள் என்று அஞ்சி போலியான நகை மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது….

The post பறக்கும்படை சோதனையில் 12 கிலோ தங்கம் பறிமுதல் போலி நகை, ஆவணம் கொடுத்த 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை: வருமானவரித்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Revenue Department ,Chennai ,Anna ,Nagar ,Anna Nagar Police Station ,Dinakaran ,
× RELATED கனகம்மாசத்திரம் அருகே பரபரப்பு...