×

பர்கூர் மலைப்பகுதியில் சாலையில் குளம் போல தேங்கிய மழை நீரை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

அந்தியூர்,மே20: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி தமிழக கர்நாடக எல்லைப் பகுதி ஓரம் அமைந்துள்ளது. இங்கு 33க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.பர்கூர் மலைப் பாதையில் எந்நேரமும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இருப்பதால் தமிழக கர்நாடகா இடையே செல்லும் வாகனங்கள் பர்கூர் மலை பாதையினை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஊசிமலை,தட்டக்கரை, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் பர்கூரில் இருந்து ஊசிமலை, தட்டக்கரை வழியாக கற்கேகண்டி, கர்நாடக செல்லும் மெயின் ரோட்டில் மழை நீர் ஒருபுறம் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதில் குறிப்பாக பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் உள்ள மெயின் ரோட்டில் 2 அடி ஆழத்திற்கு மேல் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கின்றது.

இதனால் அந்தியூரில் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது கோடைகால மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மழை பெய்யுமானால் பர்கூர் மலைப்பாதை வழியாக தமிழக-கர்நாடகா மாநிலம் செல்லும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் தண்ணீரின் அளவு தெரியாமல் செல்லும் வாகனங்களால் பெரும் விபத்து நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெரிய விபத்துக்கள் நிகழும் முன் மறைப்பகுதி ரோட்டில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பர்கூர் மலைப்பகுதியில் சாலையில் குளம் போல தேங்கிய மழை நீரை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bargur hill ,Anthiyur ,Erode district ,Tamil Nadu-Karnataka border ,Tamil Nadu ,Karnataka… ,Dinakaran ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...