×

பணிசுமையை அதிகரிக்கும் ஆப்-ஐ திரும்ப பெறக்கோரி செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

 

காஞ்சிபுரம், ஆக.13: காஞ்சிபுரத்தில் பணி சுமையை அதிகரிக்கும் ஆப்-ஐ திரும்ப பெறக்கோரி செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் தடுக்கும் வகையில் மருந்து – மாத்திரைகள் அளித்தல், தடுப்பூசி போடுதல், குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கான செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில், ஒவ்வொரு செவிலியரும், அதிக மக்களுக்கு மருத்துவ சேவையாற்ற வேண்டிய நிலையிலும், பணி சுமையுடனும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சுகாதார செவிலியர் பணி சுமை அதிகரிக்கும் யு-டபுள்யு ஐஎன் ஆப்-ஐ திரும்ப பெறக்கோரியும், இந்த ஆப் மூலம் கர்ப்பிணிகளை பராமரிக்க செவிலியர்களால் இயலவில்லை. ஆகையால், பணி சுமையை திணிக்ககூடாது என்பதை கண்டித்தும், இந்த செயலியை பயன்படுத்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை நியமிக்க வேண்டும் எனவும், ஊதிய உயர்வு, பதவி உயர்வு செய்யக்கோரியும், ஒன்றிய அரசு தொடர்ந்து செவிலியர்களை வஞ்சித்து வருவதை கண்டித்தும், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், மாவட்ட தலைவர் பவானி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்துக்கொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் நன்மையில், மாவட்ட பொருளாளர் பரிபூரணம், மாவட்ட துணை பொருளாளர் அமலா, மாவட்ட செயலாளர் மங்களம், மாவட்ட துணை செயலாளர் சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பணிசுமையை அதிகரிக்கும் ஆப்-ஐ திரும்ப பெறக்கோரி செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,
× RELATED காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராய தடுப்பு...