×

படம் மூர்த்தி பைக் மோதி பெண் பலி

 

கோவை, ஜூலை 1: கோவை செல்வபுரத்தில் உள்ள அப்பார்ட்மெண்டை சேர்ந்தவர் ஸ்ரீ ஹரி. இவரது மனைவி ஆர்த்தி (58). இவர் நேற்று தெலுங்குபாளையம் பிரிவில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக ஆர்த்தி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post படம் மூர்த்தி பைக் மோதி பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Sri Hari ,Selvapuram, Coimbatore ,Aarthi ,Telugupalayam ,Aarthi… ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...