பெரியகுளம்,நவ. 25: பெரியகுளம் கீழ வடகரை பகுதியில் ஆண்டிகுளம், உருட்டிகுளம் ஆகிய 2 குளங்களுக்கும் இடையே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 60 ஏக்கர் நிலத்தில் முதல் போக சாகுபடிக்காக விவசாயிகள் நெல் நடவு செய்தனர். இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் ஆண்டிகுளம் நிறைந்து குளத்தில் இருந்து உபரிநீர் அதிகம் வெளியேறியது. இதனால், உருட்டிகுளம் நிரம்பி அப்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை நீர் சூழ்ந்துள்ளது.
நடவு செய்யப்பட்டு 20 முதல் 30 நாட்களான நெற்பயிர்களில் மழை நீர் முழங்கால் அளவிற்கு நீர் தேங்கி வழிந்தோடாமல் இருப்பதால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி தற்பொழுது அழுகி வருகின்றது. இதனால் ஆண்டுதோறும் முதல் போக சாகுபடியின் போது வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் உருட்டிகுளத்தை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசம் appeared first on Dinakaran.