×

நெற்பயிரை சேதம் செய்த ஒற்றை யானை

 

தேன்கனிக்கோட்டை, மே 29: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளி காப்புக்காடு உள்ளது. இக்காட்டில் இருந்து, நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை வெளியேறி அருகில் உள்ள கீஜனகுப்பம், கொட்டபாலம் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்தது.

பின்னர், கீஜனகுப்பத்தில் உள்ள லட்சுமணன் என்பவரது தோட்டத்தில் புகுந்து, நெற்பயிர்களை நாசம் செய்தது. தொடர்ந்து சத்தமிட்டதால், வெளியே வந்த விவசாயிகள், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில், விரைந்து வந்த வனத்துறையினர் விவசாயிகளுடன் சேர்ந்து, அந்த யானையை பட்டாசு வெடித்து மீண்டும் தளி வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

The post நெற்பயிரை சேதம் செய்த ஒற்றை யானை appeared first on Dinakaran.

Tags : Thenkani Kottai ,Thali reserve ,Javalagiri forest reserve ,Krishnagiri district ,Keejanakuppam ,Kotapalam ,Dinakaran ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்