×
Saravana Stores

நெருங்கும் தீபாவளி பண்டிகை!: தொடர் சரிவை காணும் நகை விலை..சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,200க்கு விற்பனை.. நகைப்பிரியர்கள் உற்சாகம்..!!

சென்னை: தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் அதிரடியாக சரிவை கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,650க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.61.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம்.இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் சற்று ஏற்றுத்துடன் விற்பனையானது. அதாவது, சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,888-க்கும், கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,736-க்கும் விற்பனையானது. அதன் பின் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே விற்பனையானது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக கடந்த வாரம் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை திடீர் குறைவை கண்டு விற்பனை செய்யப்பட்டது.அதாவது சவரன் ரூ.224 குறைந்து ரூ.37,920-க்கும், கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4,740-க்கும் விற்கப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுமட்டுமின்றி இவ்வாரத்தின் முதல் 2 தினங்களில் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே  விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37,520-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.4,690-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.63.20-க்கும், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.63,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டு வந்த நிலையில், நேற்று தங்க விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இன்றைய தினம் மக்களை மேலும் மகிழ்விக்கும் வகையில் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது.  அதாவது  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,200-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,650-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.61.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டு வருவது இல்லத்தரசிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது….

The post நெருங்கும் தீபாவளி பண்டிகை!: தொடர் சரிவை காணும் நகை விலை..சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,200க்கு விற்பனை.. நகைப்பிரியர்கள் உற்சாகம்..!! appeared first on Dinakaran.

Tags : Deepavali ,Festivali ,Sawaran ,Chennai ,Deepavali Festivali ,
× RELATED நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை திருட்டு