×

நெருங்கும் தீபாவளி பண்டிகை!: டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு.. காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை..!!

டெல்லி: டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே காற்று மாசு அதிகம் உள்ள மாநிலமாக டெல்லி விளங்குகிறது. வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் ஆகியவையே டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன. இதைத் தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வரும் போதிலும், காற்று மாசை முழுமையாக கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. இதன் காரணமாக, டெல்லிவாசிகள் பெரும்பாலானோர் நுரையீரல் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு மேலும் பல மடங்கு அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதை கருத்தில்கொண்டு, டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க மற்றும் சேமித்து வைக்க 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், இருப்பு வைக்கவும், விற்கவும் விதிக்கப்பட்ட தடையை டெல்லி மாநில அரசு நீட்டித்தது. டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஏற்கனவே பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. …

The post நெருங்கும் தீபாவளி பண்டிகை!: டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு.. காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Approaching Diwali Festival ,Delhi ,Delhi Environment ,Minister ,Gopal Roy ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!