×

நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த கட்சி கொடிகள் அகற்றம்

 

தாராபுரம், ஜூன் 25: தாராபுரம் கோட்டம் மூலனூர் நெடுஞ்சாலை துறையின் உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள சாலையின் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்சிகளின் கொடிக்கம்பங்கள், கல்வெட்டுகள், ஜாதி சங்கங்களின் கொடிக்கம்பங்கள் உள்ளிட்டவைகளை அகற்றும் பணி மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் உத்தரவின் படி நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று நெடுஞ்சாலை துறை சார்பில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கொடிக்கம்பங்கள், கல்வெட்டுகளை அகற்றினர். அப்போது, மூலனூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அன்பரசி மற்றும் மூலனூர் காவல் துறையினர் நெடுஞ்சாலை துறையினர் உடன் இருந்தனர்.

The post நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த கட்சி கொடிகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Highway Department ,Mulanur Police Inspector ,Mulanur Highway Department ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...