×

நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெள்ள தடுப்பு நடவடிக்கை தீவிரம்

 

கோபி, மே 28: கோபி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் பருவமழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் பருவமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து கனிசமாக அதிகரித்து உள்ளது. அதே போன்று பவானிசாகர் அணைக்கு நீர் வரத்தும் அதிகரித்து வருவதால், அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. பவானி ஆற்றங்கரையிலும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கோபி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டம், நெடுஞ்சாலைத்துறை கோபி பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் மாநில சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகள் மொத்தம் 201 கி.மீ சாலை உள்ளது. இந்த சாலைகளில் வெள்ளபாதிப்புகளை எதிர்கொண்டு மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் மணல் மூட்டைகள், காற்றில் கீழே விழும் மரங்களை அகற்ற அறுவை இயந்திரங்கள், ஜே.சி.பி இயந்திரங்கள், கோபி நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப்பொறியாளர் மோகன்ராஜ், உதவிப்பொறியாளர் விஜய் கிருஷ்ணா தலைமையில் முன் களப்பணியாளர்களான 4 சாலை ஆய்வாளர்கள், 36 சாலைப்பணியாளர்கள் 36 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
எதிர்வரும் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து சிறுபாலங்கள் மற்றும் பெரிய பாலங்களில் உள்ள அடைப்புகள், புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது.மேலும், அதிக மழையினால் ஏற்படும் மண் அரிப்பு, மண் சரிவு, சாலை துண்டிப்புகளை உடனடியாக சரிசெய்து போக்குவரத்திற்கு தடைகள் ஏற்படாமல் இருக்க போதிய முனனேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

The post நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெள்ள தடுப்பு நடவடிக்கை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Highways Department ,Gopi ,Gopi Division Highways Department ,Coimbatore ,Nilgiris ,Dinakaran ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...