×

நெடுங்காட்டில் மின்துறை புகார்கள்

காரைக்கால், டிச.21: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் மின்துறை குறித்தும், மின்விளக்குகள் சரிவர எரிய வில்லை என்று புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா மின்துறையின் இளநிலை பொறியாளர் அழைத்து கேட்டறிந்தார். மேலும் தொகுதியில் தெருவிளக்கு எரிவது சம்பந்தமான புகார்கள் குறித்து பல்வேறு புகார்கள் வருவதாகவும், அவைகளை உடனே சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். மேலும் மின்துறை அலுவலகம் மூலம் அனுப்பப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மர், புதிய இடங்களுக்கு தெருவிளக்குகள் போன்ற வளர்ச்சி பணிகளுக்கான கோப்புகளின் நிலை குறித்தும் சந்திரபிரியங்கா எம்எல்ஏ கேட்டறிந்தார்.

The post நெடுங்காட்டில் மின்துறை புகார்கள் appeared first on Dinakaran.

Tags : Nedungad ,Karaikal ,Nedungadu ,Dinakaran ,
× RELATED காரைக்கால் அம்மையார்-பரமதத்தர்...