×

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தம் மருத்துவ காப்பீடு திட்டத்தில் நடவடிக்கை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்

வேலூர், ஜூன் 23: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் அதிநவீன செய்கை கால் பொருத்தப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்தவர் படவேட்டம்மாள் (54). இவருக்கு நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது வலது கால் முட்டிக்கு கீழ் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு பிரிவு சார்பில் அவருக்கு அதிநவீன செயற்கை கால் முதலைமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.

இதேபோல் குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியை சேர்ந்த பாபு (67) என்பவருக்கும் வலது காலில் ஆணி குத்தியதை கவனிக்காமல் விட்டதின் காரணமாக முட்டிக்கு கீழ் செயல் இழந்தது. அதனை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. அவருக்கும் நேற்று அதிநவீன செயற்கை கால் மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மூலம் வழங்கப்பட்டது. இருவரும் மிக மகிழ்ச்சியாக செயற்கை காலை பொருத்திக் கொண்டு நடந்து பார்த்தனர். அப்போது மருத்துவ கல்லூரி முதல்வருக்கும், துறை மருத்துவர் மற்றும் செயற்கை ஆய்வக நுட்பநர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். அப்போது, கல்லூரி முதல்வர் பாப்பாத்தி, கண்காணிப்பாளர் ரதிதிலகம், துறை தலைவர்கள் ராஜவேலு, லோகநாதன், மோகன் காந்தி, கோமதி, விஜய் சோப்ரா, பிஎம்ஆர் மருத்துவர் ஜெயசீலி மற்றும் செயற்கை ஆய்வக நுட்பநர்கள் செந்தில்வேலன், சரண்யா திவ்யா உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தம் மருத்துவ காப்பீடு திட்டத்தில் நடவடிக்கை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் appeared first on Dinakaran.

Tags : Vellore Government Medical College Hospital ,Vellore ,
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்...