×

நீதிபதிகள் நியமனத்தில் முன்னுரிமை தாருங்கள் தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம்

 

மதுரை, மே 5: நீதிபதிகள் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளை மதுரை வழக்கறிஞர் சங்க (எம்பிஏ) தலைவர் எம்.கே.சுரேஷ், செயலாளர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதுரையில் உயர்நீதிமன்ற கிளை அமைவதற்கான போராட்டத்தில் எங்களது சங்கத்தைச் சேர்ந்த பலர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதில் பலர் சிறை வாசத்தையும் அனுபவித்தனர். எங்களது சங்கத்தைச் சேர்ந்த பலர் ஐகோர்ட் கிளையில் வழக்கறிஞர்களாக பணியாற்றும் நிலையில், இதுவரை யாரும் உயர் நீதிமன்ற நீதிபதி பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. எனவே, ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் எங்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.

The post நீதிபதிகள் நியமனத்தில் முன்னுரிமை தாருங்கள் தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Bar Association ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவராக...