திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே விளங்காடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிமெண்ட் மூட்டைகள் மற்றும் இருசக்கர வாகனம் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
