×

நிலக்கோட்டையில் திமுக பூத் கமிட்டி பொறுப்பாளர் கூட்டம்

நிலக்கோட்டை, நவ. 5: நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாநில துணை பொது செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அறிவுறுத்தல்படி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் வழிகாட்டுதல்படி வாக்குச்சாவடி முகவர் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி தைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். கூட்டத்தில் கட்சியில் புதிய இளைஞர்களை சேர்ப்பதை தீவிரப்படுத்துவது, முகவர்களின் பணியினை வேகப்படுத்துவது, தமிழக அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களை சென்றடையும் வகையில் முகவர்கள் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் காதர் முகைதீன், ராஜ்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருகேசன், மாவட்ட தொண்டர் அணி பொறுப்பாளர் ரூபி சகிலா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் சரண்யா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் பிரிவு பொறுப்பாளர் கபடி முத்து, பொறியாளர் அணி வேல்முருகன், ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் ஆரோக்கியம், மாணவரணி பொறுப்பாளர்கள் காட்டுராஜா, கணேசன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதினெட்டாம்படி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நிலக்கோட்டையில் திமுக பூத் கமிட்டி பொறுப்பாளர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Nilakottai ,State ,Deputy ,General Secretary ,Rural Development Department ,Nilakottai North Union DMK ,Dinakaran ,
× RELATED ஓடை பாதையை மீட்க கோரி மறியல்