×

நியூயார்க்கில் புதிய சட்டம் 18 வயதினருக்கு இனி துப்பாக்கி கிடையாது

நியூயார்க்: அமெரிக்காவில் மே 14ம் தேதி சூப்பர்மார்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். 10 நாட்கள் கழித்து டெக்சாஸ் தொடக்க பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களுக்கு முக்கிய காரணம், அமெரிக்காவில் 18 வயது நிரம்பியவர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்வது மனித உரிமைகளில் ஒன்றாக உள்ளதுதான். எனவே, துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான நிபந்தனைகளை கடுமையாக்க வேண்டுமென நாடு முழுவதும் குரல்கள் வலுத்துள்ளன. துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த அதிபர் பைடனும் வலியுறுத்தி உள்ளார்.இந்நிலையில் நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு உயர்த்தி புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் நியூயார்க் மாகாணத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான 10 புதிய மசோதாக்களில் நியூயார்க் கவர்னர் கதி ஹோசுல் தற்போது கையெழுத்திட்டுள்ளார். இந்த புதிய சட்டத்தின்படி 21 வயதுக்குட்பட்டவர்கள் துப்பாக்கிகள் வாங்குவதற்கு தடை விதிக்கப்படுகின்றது. . இதேபோல் ரெட் பிளாக் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி தங்களது உயிருக்கு அல்லது மற்றவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபரின் துப்பாக்கிகளை நீதிமன்றங்கள் பறிமுதல் செய்யலாம் என்பதாகும்….

The post நியூயார்க்கில் புதிய சட்டம் 18 வயதினருக்கு இனி துப்பாக்கி கிடையாது appeared first on Dinakaran.

Tags : New York ,United States ,Dinakaran ,
× RELATED சொகுசு பங்களா, கார், பகட்டான வாழ்க்கை...