×

மாவட்டத்தில் தொடர் மழையால் தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன

ஊட்டி :நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், சோமர்டேல் பகுதியில் வன விலங்குகளுக்கு பயன்படும் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான வனப்பகுதிகளில் மான், காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, காட்டேருமை போன்ற வன விலங்குகள் வாழ்கின்றன. இவைகளுக்கு கோடைக் காலங்களில் மட்டுமின்றி எப்போதும் குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பதற்காக வனங்களின் நடுவே மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளின் அருகேயுள்ள சிறிய நீரோடைகளை மறித்து வனத்துறையினர் தடுப்பணை கட்டியுள்ளனர்.

இந்த தடுப்பணைகளில் தேங்கியுள்ள தண்ணீரை குடிப்பதற்காக  நாள் தோறும் வன விலங்குகள் வெளியில் வருவது வழக்கம். தற்போது நீலகிரி மாவட்டத்தில் எந்நேரமும் சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் புற நகர் பகுதிகளில் எந்நேரமும் சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால், ஊட்டி அருகேயுள்ள சோமர்டெல் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடுகிறது. பார்ப்பதற்கு சிறிய அணை போல் காட்சியளிக்கிறது.

இந்த தடுப்பணையில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், வரும் சில மாதங்களுக்கு இப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு தண்ணீர் பிரச்னை இருக்காது.
அதேசமயம், இதில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் சிறியூர் ஆற்றில் கலந்து மூலம் மசினகுடி பகுதியில் உள்ள விலங்குகளின் தாகத்தையும் தீர்க்க வாய்ப்புள்ளது. மேலும், தற்போது நீலகிரியில் மழை பெய்து வரும் நிலையில், இது போன்று பெரும்பாலான பகுதிகளில் உள்ள சிறிய தடுப்பணைகளும் நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஆம்பூரில் மேம்பால பணியின்போது சாரம் சரிந்து விபத்து