நாமக்கல், ஜூலை 16: நாமக்கல் பூக்கடைகளில் நகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு செய்து, 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தார். நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், பஸ் ஸ்டாண்டில் உள்ள மொத்த பூ விற்பனை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து நேற்று காலை திடீர் ஆய்வு செய்தார். மொத்தம் 15 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 45 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளருக்கு ₹20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் பூ வியாபாரிகளுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த சோதனையில், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கர், துப்புரவு பணி மேற்பார்வையாளர் கதிர்வேல் மற்றும் தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.
The post நாமக்கல் பூக்கடைகளில் நகராட்சி கமிஷனர் ஆய்வு appeared first on Dinakaran.