×

கேரளாவில் நடைபெறும் தென் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம்: தமிழக அரசு பங்கேற்காது என தகவல்

திருவனந்தபுரம் :  15வது நிதிக் குழுவின் பரிந்துரையில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்து விவாதிக்க கேரள அரசு ஏற்பாடு செய்துள்ள தென் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக அரசு பங்கேற்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020 முதல் 2025 வரையிலான 5 ஆண்டுக்கு மத்திய அரசின் நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்க அமைக்கப்பட்டுள்ள 15வது  நிதி குழுவின் பரிந்துரைகள் மக்கள் தொகை கணக்கெடுப்பின்  அடிப்படையில் இருப்பதால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு குரலை எழுப்பியுள்ளனர்.

2011 கணக்கெடுப்பை கருத்தில் கொண்டால் 1971ம் ஆண்டுக்கு மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்திய தமிழகம், கேரளம் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறையும். தமிழகத்திற்கு ரூ.50,000  கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த நிலையில் இது தொடர்பாக விவாதிக்க தென் மாநில நிதி அமைச்சர்களுக்கான ஆலோசனை கூட்டத்திற்கு கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதில் பங்கேற்க அழைப்பு விடுக்க தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு கேரள அமைச்சர்  சில வாரங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார். இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பங்கேற்க ஒப்புக்கொண்ட நிலையில் தமிழகம் அதை தவிர்க்க முடிவு செய்துள்ளது. முன்னதாக தமிழகம் பங்கேற்க வேண்டும் என எதிர் கட்சி தலைவர்  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது

Tags :
× RELATED சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை