×

நடிகர் சமுத்திரகனி ஆபீசில் நுழைந்த மர்ம பெண்: போலீசார் விசாரணை

சென்னை: நடிகர் சமுத்திரக்கனியின் அலுவலகத்தில் மர்ம பெண் புகுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர் பகுதியில், பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனியின் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மேலாளராக கார்த்திக் (43) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை மதுரவாயல் போலீசில் ஒரு புகார் அளித்தார். அப்புகாரில், நடிகர் சமுத்திரகனியின் அலுவலகத்துக்குள் புகுந்த ஒரு மர்ம பெண், கார்மீது வைத்திருந்த மழை கோட்டுகளை எடுத்து சென்றுவிட்டதாக  குறிப்பிட்டிருந்தார். இப்புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், நடிகர் சமுத்திரகனியின் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், நடிகர் சமுத்திரகனியின் அலுவலகத்தில் புகுந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்தது. இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

The post நடிகர் சமுத்திரகனி ஆபீசில் நுழைந்த மர்ம பெண்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Samuthirakani ,Chennai ,Chennai Maduravayal, Ashtalakshmi Nagar ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...