×

நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தில் மேயர் ஆய்வு

 

ஓசூர், ஜூன் 26: ஓசூரில், புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தில் மேயர் சத்யா ஆய்வு மேற்கொண்டார். ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டு கொல்லர்பேட்டையில், ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தை மாநகர மேயர் சத்யா, ஆணையாளர் மாரிச்செல்வி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல குழு தலைவர் ரவி, செயற்பொறியாளர், மாநகர நல அலுவலர், உதவி பொறியாளர் மாமன்ற உறுப்பினர் மல்லிகா தேவராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தில் மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Urban Sub ,Health Centre ,Hosur ,Mayor ,Sathya ,Urban Sub-Health Centre ,Ward 25 ,Hosur Corporation ,Dinakaran ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்