×

தோகைமலை பகுதிகளில் விட்டு விட்டு மழை வயல்களில் முளைத்துள்ள தீவனபுற்கள்-கூட்டமாக மேயும் செம்மறி ஆடுகள்

தோகைமலை : தோகைமலை பகுதிகளில் சில தினங்களாக விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் விவசாய நிலங்கள் மற்றும் தரிசுகளில் புற்கள் வளர்ந்துள்ளதால் கால்நடைகள் கூட்டம், கூட்டமாக மேய்ந்துவருகிறது.கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் கடந்த சில வருடங்களாக போதிய மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டு கால்நடைகளுக்கு தீவனங்கள் இல்லாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் விவசாயிகள் பராமரித்து வந்த கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைக்காத சூழல் தொடர்கதையாக இருந்து வந்தது. இந்நிலையில் கால்நடைத் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டநிலையில், விலை ஏற்றத்தால் விவசாயிகள் தங்கள் வளர்த்து வந்த கால்நடைகளை பராமரிக்க முடியாமல் அவதிப்பட்டனர். கடந்த ஆண்டு பருவமழை பெய்து விவசாயிகளை மகிழ்வித்தது. இதனால் அழிந்துபோன விவசாய நிலங்களை சரிசெய்து விவசாயம் செய்வது, கால்நடை வளர்க்கும் தொழிலை தொடங்குவது உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மாதம் தோகைமலை பகுதிகளில் விட்டுவிட்டு தொடர் மழை பெய்து வந்தது. இதனால் விவசாய நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களில் கால்நடைகளுக்கான தீவன புல்கள் வளர்ச்சி பெற்று உள்ளது. இதனால் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் நிம்மதி அடைந்து உள்ளனர். இதன்மூலம் தரிசு மற்றும் விவசாய நிலங்களில் வளர்ந்து உள்ள தீவன புல்களை மேய்ச்சலுக்காக கால்நடைகளை கூட்டம் கூட்டமாக ஓட்டிச் சென்று வருகின்றனர்….

The post தோகைமலை பகுதிகளில் விட்டு விட்டு மழை வயல்களில் முளைத்துள்ள தீவனபுற்கள்-கூட்டமாக மேயும் செம்மறி ஆடுகள் appeared first on Dinakaran.

Tags : Tokai Hills ,Thokaimalai ,Dinakaran ,
× RELATED கடவூர், தோகைமலை பகுதிகளில்...