×

தொண்டி, நம்புதாளை பகுதி ஏடிஎம்களில் செக்யூரிட்டிகள் நியமிக்க கோரிக்கை

தொண்டி, ஜூலை 16: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, நம்புதாளை பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன. இந்த ஏடிஎம்களில் செக்கியூரிட்டிகள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் அதிகம் உள்ளன. இந்த வங்கிகளுக்கான ஏடிஎம்களில் செக்யூரிட்டிகள் இருந்தனர். அவர்கள் மூலம் பணம் எடுக்க மற்றும் செலுத்த வரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை சரி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏடிஎம்களில் இருந்த செக்யூரிட்டிகள் நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே அனைத்து ஏடிஎம்களிலும் செக்கியூரிட்டி விரைந்து நியமிக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தொண்டி, நம்புதாளை பகுதி ஏடிஎம்களில் செக்யூரிட்டிகள் நியமிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Nambuthalai ,Thondi, Ramanathapuram district ,Thondi, Nambuthalai ,Dinakaran ,
× RELATED நம்புதாளை ஆற்றுப்பகுதியை தூர்வார மீனவர்கள் வலியுறுத்தல்