×

தொடர்ந்து தடுக்கப்படும் ஊராட்சி மன்ற பணிகள்: பொதுமக்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே ஊராட்சி பணிகளை தடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மாகரல் ஊராட்சி பெண் தலைவராக இருப்பவர் மேத்தா ஞானவேல். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியடைந்த வீரராகவன், ஊராட்சி தலைவரின் பணிகளை செய்யவிடாமல் தடுப்பதுடன், 100 நாள் வேலை உள்பட பல்வேறு பணிகளை தடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வந்தது. இதுதொடர்பாக, மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.இந்நிலையில், நேற்று மாகரல் காவல் நிலையத்தில், இரு தரப்பினர் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து ஊராட்சி தலைவர் மேத்தா ஞானவேல் தலைமையில், பொதுமக்கள் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், அவர்களிடம் சமரசம் பேசினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை அப்புறப்படுத்தி  காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதை பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்களும் காவல் நிலையத்தில் புகுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேல்முருகன், இன்ஸ்பெக்டர்கள் ராஜகோபால், வெங்கடேசன் ஆகியோர் காவல் நிலையத்தில் இருதரப்பினர் இடையே சுமுக பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் வேல்முருகன், காவல் நிலையத்தில் இருந்து வெளியேறினார். அப்போது, சில பெண்கள், அவரது வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர், பொது மக்களின் வாக்குவாதத்தை புறக்கணித்து, காரில் சென்று விட்டார். இதனால் அங்கிருந்த மக்கள் அதிருப்தியடைந்தனர்….

The post தொடர்ந்து தடுக்கப்படும் ஊராட்சி மன்ற பணிகள்: பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Kanchipuram ,Uthramerur ,Dinakaran ,
× RELATED வீட்டுமனையை அளவீடு செய்யாததை...