×

தேனியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள்

தேனி, நவ. 5: தேனி மாவட்ட அளவிலான செஸ் போடடிகள் நேற்று முன்தினம் நடந்தது. தேனியில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. போட்டிகளுக்கு அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். பொருளாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார். அகாடமி தலைவர் சையதுமைதீன் வரவேற்றார். போட்டிகளை ஓய்வு பெற்ற வனச்சரகர் அமானுல்லா துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இப்போட்டியில் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தியாஸ்ரீ, ஸ்ரீஆக்னேயா, சர்வேஸ்வர், ஸ்ரீனித், வர்சன், லோகேஷ்கிருஷ்ணா,

சாய்சரவணான, சிந்துஜஸ்வின், ஹனிசாக்ஸ்திதா, நிகில்அமுதன் ஆகியோரும், 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில், அகிலேஷ், சாத்வீகா, ஸ்ரீகீர்த்திகா, திருகார்த்திக், ஸ்ரீஹரன், நாகபிரனேஷ், சன்ஜெய்குமார், அரியசெல்வம், சூரியகுமரன், புவன்சங்கர் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இப்போட்டியில் இளம் செஸ் வீரர்களுக்கான பரிசுகளை கொடுவிலார்பட்டி கம்மவார் பப்ளிக் பள்ளி சர்வேஷ், போடி சிசம்பள்ளியை சேர்ந்த நிதாஸ்ரீ, லட்சுமிபுரம் அரசு தொடக்கப்பள்ளியை சேர்ந்த தீபக்ராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் வருகிற 14ம் தேதி மதுரையில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

The post தேனியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Level ,Theni ,Grand Master Chess Academy ,Academy Secretary ,Madasamy ,Dinakaran ,
× RELATED தேசிய அளவிலான கூடைபந்து போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு