×

தேசிய அளவிலான வாட்டர் போலோ போட்டி அரசு பள்ளி மாணவி தேர்வு

 

ஈரோடு, ஜூலை 3: தேசிய அளவிலான வாட்டர் போலோ போட்டியில் பங்கேற்க ஈரோடு அரசு பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பெண்கள் பிரிவு, மாநில அளவிலான வாட்டர் போலோ போட்டிகள் கடந்த ஜூன் 23ம் தேதி சென்னையில் உள்ள வேளச்சேரியில் நடைபெற்றன. இதில், ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த நகரவை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் அல்ஃபியாகான் அபிகான் எனும் மாணவி பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து, வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறவுள்ள பெண்களுக்கான 40வது சப்-ஜூனியர் மற்றும் 50வது ஜூனியர் நேஷனல் அக்குவாடிக் சாம்பியன்ஷிப் 2024 எனும் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணியில் மெய்ன் டிஃபென்சராக விளையாட தேர்வாகியுள்ளார். அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் சக மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post தேசிய அளவிலான வாட்டர் போலோ போட்டி அரசு பள்ளி மாணவி தேர்வு appeared first on Dinakaran.

Tags : National Level Water Polo Competition Govt School Girl Exam ,Erode ,Erode government school girl ,level water polo ,level ,Velachery, Chennai.… ,National level water polo competition ,Dinakaran ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...