- தென்காசி மக்களவை
- தென்காசி
- தென்காசி லோக்சபா
- சங்கரன்கோவில்
- கடையநல்லூர்
- வாசுதேவநல்லூர்
- ராஜபாளையம்
- வில்லிபுத்தூர்
- விருதுநகர் மாவட்டம்
- டாக்டர்
- ராணி குமார்
- திமுக
- அஇஅதிமுக
தென்காசி, ஜூன் 5: தென்காசி மக்களவை ெதாகுதியில் தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாளையம், வில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டமன்ற ெதாகுதிகள் உள்ளன. இதில் திமுக சார்பில் டாக்டர் ராணி குமார், அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமமுக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். தென்காசி (தனி) மக்களவை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் யுஎஸ்பி கல்லூரியில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தென்காசி மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடந்தது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 24 சுற்றுகள் எண்ணப்பட்டன.
The post தென்காசி மக்களவை தொகுதியில் 24 சுற்று வாரியாக கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் appeared first on Dinakaran.