×

தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே தரைதட்டிய கப்பல் மீட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே நேற்று தரைதட்டிய சிறிய ரக கப்பல் இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டது. மாலத்தீவிலிருந்து தூத்துக்குடி நோக்கி நேற்று அதிக பாறைகள், ஜல்லி, மண் போன்றவை ஏற்றிக்கொண்டு திரும்ப தூத்துக்குடிக்கு பழைய துறைமுகத்திற்கு வந்து கொண்டிருக்கும் இந்த பகுதி இழுவை கப்பல் மூலம் உரிய வழித்தடத்தில் கொண்டு செல்வதற்கு முயற்சி செய்துள்ளனர். காற்றின் வேகம் மற்றும் கடலின் சீற்றம் அலைக்கழிப்பின் காரணமாக பார்ஜே இழுவை கப்பலில் கட்டியுள்ள கயிறு அறுக்கப்பட்டு திசைமாறி தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு அருகேயுள்ள இனிகோ நகர் பகுதியில் நேற்று தரை தட்டியது.இதனை தொடர்ந்து இன்று காலை 3 விசைப்படகு மூலம் அந்த பார்ஜே இழுத்து ஆழ்கடலுக்குள் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர முயற்சிக்கு பிறகு இந்த பார்ஜே தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து அவர்கள் கொண்டு சென்றுள்ளனர்….

The post தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே தரைதட்டிய கப்பல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin Old Port ,Tuticorin ,Tuticorin Old Harbor ,Maldives ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில்...