×

தூத்துக்குடி, கோவில்பட்டியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவு

தூத்துக்குடி, ஜூலை 25: தூத்துக்குடியில் தொடங்கிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிஜி தாமஸ் வைத்யன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம், முதற்கட்டமாக 600 ரேஷன் கடைகளில் நேற்று தொடங்கியது. தூத்துக்குடியில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடந்த முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநருமான சிஜி தாமஸ் வைத்யன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சப்-கலெக்டர் கவுரவ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்திட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கந்தசாமிபுரம் ஆர்.சி.பெத்தானியா பள்ளியில் நடைபெற்று வரும் விண்ணப்ப பதிவு பணிகளை மேயர் ஜெகன்பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கவுன்சிலர்கள் ஜான்சிராணி, தெய்வேந்திரன், அந்தோனி மார்ஷலின், வட்ட செயலாளர் ரவீந்திரன், பிரதிநிதி மூக்கையா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் சமுதாய நலக்கூடத்தில் பயோமெட்ரிக் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். தாசில்தார் லெனின் முன்னிலை வகித்தார். கோட்டாட்சியர் ஜெயா கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி, கோவில்பட்டியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவு appeared first on Dinakaran.

Tags : Kovilpatti, Thoothukudi ,Tuticorin ,Kovilpatti ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் காக்கி...